மூன்று வரிக் கவிதைகள் -2

10)
சில சமயங்களில்
பலனை எதிர்பார்த்தே உதவி செய்வோம்.
உதவியே செய்யாமல் இருப்பதற்கு அது மேல்தானே.

11)
புதிதாக யோசிக்கத் தெரியவில்லை
ஆதலால் இப்படிச் சொல்கிறேன்
"பனித்துளியின் அடியில் புல்"

12)
கூடவே இருந்து கொண்டு
முதுகில் குத்துகிறது
அரைஞாண் முடிச்சு.

13)
உன் உள்ளாடைக்கு மேல்
இரண்டு புடைவைகளை அணிந்துகொள்
என் கண்கள் நிர்வாணமாய் இருக்கின்றன.

14)
இதயம் தாலாட்டை நிறுத்தியதும் நிம்மதியாய் உறங்கியது
பிணம்.

15)
இந்து நண்பனுக்காகப்
"பட்டை" போட்டுச் சமைக்கிறான் இஸ்லாமிய நண்பன் பிரியாணியை.

எழுதியவர் : திசை சங்கர் (1-Feb-23, 6:21 pm)
சேர்த்தது : THISAI SANKAR
பார்வை : 80

மேலே