-ஏன்னு தெரியல -

-ஏன்னு தெரியல -
என் அன்பு அழகியே ....!
ஓம்....
ரெட்ட சடையில,
வெட்டு நடையில.,
கெட்டுப்போன மனம்
கிறுக்கு புடிக்குதே !.
கூந்தல் கலைக்கிற
அதுவும் அழகுதான் .
கோனிநடக்குற
அதுவும் அழகுதான்.
இது ...,
காட்சிப்பிழையினு
கடந்துபோகவா ?
இல்ல ...,
மூச்சு இறைக்க ஒன்ன
நானும் தொரத்தவா ?!.
தெருவோர கடையில
தேநீர் அறுத்துறேன் ,உன்
தீண்டும் பார்வைய
தேடி தவிக்கிறேன் .
சவுக்க சொழட்டிநீ
நொடியில் அடிக்கிற ,
சுருக்கு சுருக்குனு ,ஓ
நெனப்ப ஊத்துற .
எதுக்கு பிறந்தேனு
எனக்கு தெரியல
ஒனக்கு புடிக்கல .அது
ஏன்னு புரியல .
விரட்டி அடிக்கிற -நான்
காட்டு மிருகமா ?
மனம் ஒன்னசுத்துதே
காதல் அரும்புமா jQuery17105144254281373617_1675263492794?!
-கங்கைமணி -