புன்னகைப் பூக்கள்

புன்னகைப் பூக்கள்

கறை படியா அழகு வதனம்!
திரை மறையா கோல சந்தம்!

கூடும் முகிலின் வெண்மைக் கூட்டம்!
என்னவளைக் கண்டு பயந்து ஓடும்!

மானின் உருவம் தோற்றுப் போகும்!
அவள் உடுத்த பட்டாடை கண்டால்!

வண்ணம் தீட்டும்  மலர்கள் தோட்டம்!
அகம் மகிழும் எண்ண ஓட்டம்!

உன் இதழ் பூக்கும் புன்னகைக்கு!
எந் நகையும்  நாணம் கொள்ளும்!

எழுதியவர் : ஜவ்ஹர் (4-Feb-23, 3:29 pm)
சேர்த்தது : ஜவ்ஹர்
Tanglish : punnagaip pookal
பார்வை : 212

மேலே