பட்ட மரங்கள்

பட்ட மரங்கள்!

கனி நிறைந்த
பசும் மரங்களைத்தான்
காலைப் பனி கூட அமர்ந்தே ரசிக்கிறது!

பச்சிகளும்  வண்ணப் பூச்சிகளும்
வெண் பனிக் களியில்
குதித்தே குளிக்கின்றன!

பசுமை இழந்த
பட்ட தருக்களில்
புழுக்களின் ஆதிக்கம்தான்
கோலொச்சுகின்றன!

தென்றலும் இளம் கொன்றலும்
இலை நிறைந்த
வனங்கள் கண்டுதான்
சம்மபாசிக்கின்றன!

பட்ட மரமாய் நிற்கும்
களைத்துப் போன ஜீவனை
எட்ட இருந்து கூடப் பார்க்க
ஒரு ஜீவன் இல்லை எங்கும்!

எழுதியவர் : ஜவ்ஹர் (4-Feb-23, 5:57 pm)
சேர்த்தது : ஜவ்ஹர்
Tanglish : patta marangkal
பார்வை : 104

மேலே