பாருக்குப் பாரதி

பாருக்குப் பைந்தமிழ் தமிழுக்கு பாரதி

அச்சமில்லை அச்சமில்லை என்றுரைத்த பாரதி!
மிச்சமில்லாது தமிழுக்குத் தொண்டு செய்தான்!

வார்த்தையிலே துணிவுகொண்டு நல்லறம் பாடியே!
இல்லறமுதல் சொல்லறம்கொண்டே தமிழைப் பாடினான்!

பாருக்கு பைந்தமிழ் தமிழுக்கு பாரதியென்றே!
செந்தமிழ் வளர்த்துத் தாகம் தீர்த்தான்!

குழந்தைக்கும் தமிழ் பாலூட்டப் பாடினான்!
தமிழ் இகழ்ந்தோரை இடித்துரைத்தே வெகுண்டெழுந்தான்!

சுதந்திர தாகம்கொண்டு தமிழ் இசைத்தான்!
முத்தமிழுக்கும் அவனே இலக்கணம் ஆனான்!

எழுதியவர் : ஜவ்ஹர் (5-Feb-23, 12:07 pm)
சேர்த்தது : ஜவ்ஹர்
பார்வை : 46

மேலே