எது வீரம்

சீறி வெகுண்டு வந்த காளை
வெறியோடு அதை அடக்க எதிர்கொண்ட
காளை அவனை கொம்பால் தூக்கி
எறிய அப்புறம் வீழ்ந்த அவன்
சட்டன எழுந்து மீண்டும் காளையை
அடக்க முனைய இம்முறை காளையின்
கொம்பு அவன் வயிற்றைப் பதம்
பார்க்க மண்ணில் சாய்ந்தான் காளை
மீண்டும் எழுந்திட வில்லையே பாவி
இருபதே வயது தாய்ச்சொல் கேளாது
இப்படி மூச் அடங்கி மண்ணில்
தன் உலகையே இழந்த தாய்
கண்ணீரும் கம்பலையு மாய்
காளை அறியாது இவள் தாபம்
இது வேண்டா விளையாட்டா
சொல்ல முடியவில்லை மெல்லவும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Feb-23, 8:33 pm)
Tanglish : ethu veeram
பார்வை : 71

மேலே