போக்காட்டியும் போக்காளனும்

பதநீ வாங்கக் காசு இல்ல போக்காட்டி
ஊமத்தம்பூ நமக்குப் போதும் போக்காளா!

கோழிமுட்டைக்கு எங்க போவ போக்காட்டி?
காக்காமுட்ட நமக்குப் போதும் போக்காளா!

சாம்பார் வைக்கக் காசு இல்ல போக்காட்டி
கடைஞ்சான் குழம்பு வச்சித்தறேன் போக்காளா!

கருப்பட்டி வாங்க காசு இல்ல போக்காட்டி
கருப்பட்டிப் பழம் போதுமடா போக்காளா!

மச்சுவீடு கட்ட வேணும்
போக்காட்டி
குச்சிவீடே நமக்குப் போதும் போக்காளா!

பணமூட்டை சேக்க வேணும் போக்காட்டி
உப்பு மூட்டை தூக்கிக்கடா போக்காளா !

வேர்க்கடலை போல
ரெட்டப் புள்ள போதுமடி போக்காட்டி
கஞ்சத்தனம் வேணாம்
பதினாறு பெத்துக்கலாம் போக்காளா!!

எழுதியவர் : திசை சங்கர் (9-Feb-23, 11:07 am)
சேர்த்தது : THISAI SANKAR
பார்வை : 57

மேலே