பிரியாகை - மீள்
பிரியாகை (மீள்)
இந்த நாலு நாள்
சிறையிலிருந்து ஜீவபறியந்தம் முடிஞ்சு வெளியாகிறது மாதிரி அப்டி ஒரு ரிலாக்சேஷன். இங்க இருந்து போறது.
நினைவின் பயணம் வெளியிடையில் என் நட்புகள் சிலருடைய எனக்கான காத்திருப்பின் பலன் நான்.
ஒன்றாக இருக்கும்பொழுது எத்தனை எத்தனை சொல்லிலடங்கா வார்த்தை
முட்டல்கள், செவியருகின் மூச்சுமுட்டல்கள். பெருமிதங்கள். இதங்களில் இதழ் மெளனித்திருந்த பேரகராதிகள். பேருவகைகள். ஆழ் அன்பின் ஆதங்கக் குறிப்பேடுகள்.
அதி-அழுததும் அதிரச்சிரித்ததும்
அரவணைப்பின் உச்சி முகர்ந்ததும்
மனமிறுகி பிரயாணித்ததும் என எல்லாமே ஒருசேர இருந்திருந்தோம்.
ஒவ்வொருவராய் பிரிய நேரிடும் தருவாயின் நீள் அணைப்பில்
பெருமூச்சொன்றின் மீயொலி
நீர்த்திளைக்க எத்தனிக்கும் கண்களுக்கு
ஆறுதல் சொல்லிவிடும். ஏன் என்றால்
போகிறேன் என்பதுவரைதான்
அந்நொடிவரைதான் அவர்கள் நமக்கானவர்கள் என்பதற்கான
உறுதியின் விழிப்பாடு . உறுதித் தளர்த்துதலின் சமயம் என்பது சிரித்துக் கொண்டிருப்பவர்களின் பாவனையில்
வெறும் மரணமே இழையோடிக் கொண்டிருக்கும். போகிறேன் என்பதுதானே அவர்களுடனான
நம் கடைசி நொடி :)
போக அனுமதிப்பது
வலிப்பொறுக்கக் கற்றுக்கொள்ளும் ஒரு யுகத்தின் நொடி.
இனி இல்லை
இனிமேல் இல்லை என்கிற
நொடிகளைத் தவிர
மற்ற யாராலும் கற்றுக் கொடுக்க
முடியாதவை வலியும்
சகிப்புத் தன்மையும்.
ஒவ்வொரு செங்கலென
எங்களால் பார்த்துப் பார்த்துக்
கட்டிய இணையவீடு பார்ப்பாரற்றுக் கிடந்தழிய வேண்டாமென்றே
வந்து வாழ்ந்து போயிருப்போம் .
மனதின் மர்ம ஓரங்கள் சேர்த்துவைத்திருக்கும் என் பற்றிய ரகசியங்களுமாய். என்னிடம் சொல்லிவிட எண்ணி
எத்தனையோ நாட்கள்முதலாய்
தேக்கிவைத்த
கிலேசங்களுமாய்
கடந்துபோன முகங்களின்
தற்காலிக காத்திருப்பு
இந்த என் வருகையின் நொடி .
விரல் விட்டு எண்ணினால்கூட
ஒரு நாலு பேரைத் தவிர
எனக்குன்னு சொல்லிக்கும்படி யாருமே இங்க இல்ல இன்னைக்கு .
இருந்தவர்கள் எல்லாரும் போயிட்டாங்க.
எனக்கான முக்கியமான நாளொன்றில்
சொல்லிச்சென்ற
அவர்களுடைய வருகை இருக்கிறது.
என்னுடைய
ஏதோ ஒரு நிமிடத்தின் பிரவேசமும்
நான் அவர்களுக்களித்த
சத்தியத்திற்காக மட்டுமே .
எண்ணற்ற அணைத்தல்களுக்குள்
எத்தனை நாங்கள் வாழ்ந்திருந்தோம்
அத்தனை விதவிதமான நாங்கள்
எங்களைக் கண்டிருந்தோம்.
ஒரு ஆயுளுக்குப் போதும்வரையான
வாழ்க்கை வாழ்ந்துவிட்டிருந்தோம்
இதெல்லாம் சொல்லித் தீர்க்கும் முன்,
ஆயுளே முடிந்துவிடும்போல் .
எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நாங்கள் அத்தனை இருக்கிறோம்.
இன்னைவரை பேசிட்டும், அப்பப்போ பார்த்துட்டும், உரிமையா அன்பு செய்திட்டும், குணமறிந்தும் விட்டுக்கொடுக்காமை, ஒருபோதும் பேச்சில் நிலைத் தவராமை. திட்டும்போது கூட அதற்குள் இருக்கும் நன்மை. நஞ்சோ வன்மையோ இல்லாத பறிதவிப்பு. இதெல்லாம் இங்க மிஸ் பண்ணி நிறைய வருடங்கள் ஆகிறது.
90 களில் போஸ்டல் ஸ்ட்ரைக்கில் ஃப்ரண்ட்ஸ் ஓட லெட்டர்ஸ் அஹ் மிஸ் பண்ணும்போதிருந்த தவிப்பு, மழையின்போது இணைப்பூட்டாத லேண்ட்லைன் மேலான கோபம் எல்லாம் இப்போது உடைந்திருக்கிறது.
யார் வீட்டிலெல்லாம் லேண்ட்லைன் இருக்கு இன்னும்.
இனி சில ஃபோன் கால்ஸ்
சில கடிதங்கள். புரட்டி எடுக்கணும் எல்லோரையும் சந்திக்கணும்.
இப்படித்தான் என்ன ஏதுன்னு சொல்லாம கொள்ளாம மூட்டை
முடிச்சக் கட்டிக்கிட்டு
கைய்யில கொஞ்சம் பணமும் ATM க்ரெடிட் கார்ட் னு எடுத்துட்டு இலக்கு நிர்ணயிக்காம ரயில் ஏறிடுவேன் அப்போல்லாம்.
அங்கங்க ஒவ்வொருத்தரா ஏறுவோம் அப்படிப்பட்ட உலகத்துக்கு மீண்டும் போய் ஐக்கியமாகறேன்னு நினைக்கும்போது
எண்ணற்ற எதிர்ப்பார்ப்புகள்.
இங்க தற்காலமாக யாரிடமும் தோன்றிடாத எதிர்ப்பார்ப்பு.
வழக்கமா அவங்க எல்லோரும்தான் அழைப்பதும்.
போனே பண்ணமாட்டேங்கிறியேடா ன்னு திட்டிட்டு பிடிவாசியா
இனி போன் பண்ணமாட்டோம்னு சொன்னவங்களை அழைத்து, அதிகக் காலம் கழித்து "ஆம் பேக்" .. என்று சொல்லும்போது அவங்க கெட்ட வார்த்தைச் சொல்லித் திட்டும்போது. You know those are all irrespective/regardless of the expectations.
இந்த காலகட்டங்களில் யாரோ ஒருவரையே அப்படி பார்த்திருக்க முடிகிறது.
உண்மைதான்
நேச வங்கிகளின் கடன் தீர்க்காமை என்கிற சொல்லுக்கே இடமில்லாத இதயக் கிடங்குகளுடன் ஒரு பிரியாகையைப்போல கலந்திருப்போம்
வெளியில் என் வருகையையொட்டி
நிறையப் பேர் காத்திருக்கிறார்கள்.
பூர்ணிமா உனக்குத் தெரியுமா அந்த ரிங் டோன் தான் இன்னும் வச்சிருக்கேன்.
மகி இறந்துட்டு நா மொத்தமா Depression ல இருந்த சமயம் நீ என்னோட ரிங் டோன் மாத்திவிட்டுட்ட. நா எதையோ மிஸ் பண்ணதுபோல இருக்கிறப்போ நீ கால் பண்ணி கேக்கவே அந்த ரிங்டோன் என சொல்லிருப்ப.
யார் கால் பண்ணினாலும் ..
அந்த ரிங்டோன் தான் இன்னைக்கும்
ஒலிக்கும். ரிங்டோன் கூட நம் நினைவுகளின் ஒரு ஷேர் தானே. :)
மனவருத்தத்தில்
மாதவன் அந்த கார்டனில்
அவளையே நினைத்து
ஏகாந்ததையில்
தனித்திருக்கிற காட்சி வரும்போது ஹாரீஸ் ஜெயராஜின் இசை,
அந்த ஃப்ளூட் ஸ்டான்ஸா மென்மாருதமாய் வருடிப் போயிருக்கும்
மின்னலே படம் பார்க்கிறப்போ எல்லாம். மறுபடி மறுபடி அந்தக் காட்சியை ரீவைண்ட் செய்துப் பார்க்கிறேன். ஃப்ரண்ட்ஷிப்ப அடையாளப்படுத்த எத்தனை எத்தனை அழகான விஷயங்கள் இருக்கோ, முட்டாள் தனங்கள் இருக்கோ, அத்தனையும் நாம் கையாண்டிருந்தோம். சொல்லப்போனால்
அதற்குள்தானே இன்றுவரை வாழ்ந்துகொண்டும் இருக்கிறோம்.
பைராகி