கனவை சுமக்க

கண்கள் மூடிக் கிடக்கும்‌ வேளையில்
நான் காணும் அழகிய அதிசயம் உந்தன் முகமே

இரக்கமற்ற பார்வையால் என்
இதயத்தைக் கிழித்தெறிபவளே
விழிகளுக்குள் உன்னை வைத்து என் இமைகளின் கதவை
அடைத்து விட்டேன்

கனவினில் உன்னை சுமக்கும் நான்
உன் கனவுகளையும் சேர்த்து சுமக்க காத்திருக்கிறேன்
உனது மறுமொழியை எதிர்நோக்கி

எழுதியவர் : ஞானபிரகாஷ் (18-Feb-23, 6:53 pm)
சேர்த்தது : ஞானபிரகாஷ்
Tanglish : kanavai sumakka
பார்வை : 119

மேலே