புகை-பிரபஞ்சப் பகை

பிரபஞ்சப் பகை..

ஃஃஃஃஃஃஃஃஃ

பிரபஞ்சப் பகையாகும் புகையென்னும் நஞ்சு/
நுரையீரல் கெடுக்கும் ஓசோனைத் துளைக்கும் /

சுருள்சுருளாய்ப் புகைவிட்டு சுகத்தையெலாம் இழந்து /
மருளவைக்கும் எதிர்கால இருட்டினிலே விழுந்து /

உறவுகளை உற்றாரை நடுத்தெருவில் விட்டு /
பறவையென இளவயதில் பரலோகம் தொட்டு /

என்னவொரு துயரமடா இளையவனே கேளாய் /
துன்பம்தரும் புகையிலையின் பொருட்களெதும் வேண்டா /

அறிந்தாலும் தீயவிடம் அருந்துதலும் தகுமொ /
சிறந்தோர்கள் சீண்டாத செயல்களுமொ முறையோ /

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (22-Feb-23, 11:39 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 35

மேலே