282 ஈயாக் கயமை இனம் விழைந்து உண்ணும் விலங்கினும் இழிவு – கடும்பற்று 11

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும். விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

வனவி லங்கும்விண் வாழ்பக்கி யுந்தந்தம்
இனமோ டன்றியெ டாவிரை யேழைகட்(கு)
அனமி டாதுதம் ஆகம தொன்றையே
மனமு வந்து வளர்ப்பர் கயவரே. 11

– கடும்பற்று, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”காட்டு விலங்குகளும், வானத்தில் பறந்து வாழும் பறவைகளும் தங்கள் இனங்களை விட்டு இரை எடுக்காது. தீயொழுக்கம் உடையவர்கள் மட்டும் வறியவர்களுக்கு உண்ணச் சோறிடாது தம் உடம்பு ஒன்றையே மனமகிழ்ந்து வளர்ப்பார்கள்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

பக்கி - பறவை. அனம் - சோறு, ஆகம் - உடம்பு. கயவர் – தீயொழுக்கம் உடையவர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Feb-23, 4:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே