நல்ல தமிழாசிரியர்

நேரிசை வெண்பா


தேவாரம் கற்று திருவாச கம்படித்தும்
போவாய் பெரியார் பொழிவுகேட்டு --. நாவாய்
தவறிக் கடலில்வீழ் வாய்தத் தளித்து
அவமான மேயேது வாழ்வு

தாய்தந்தை பக்தி மறந்ததும் பின்தெய்வ
மாய்நின்ற கந்தன் மறந்ததும் - வாயால்
புகழ்ந்தாய் பெரியார் புளுகனை ஏனோ
புகழாய் கடவுளைப் போற்று


திராவிடன் ஆட்சி திருட்டைப் பெருக்கி
அராசக ஆட்சி வளர்த்து -- பராரித்
தமிழைத் திராவிட மாக்கிப் புதைத்தார்
தமிழின் தகைசால் அறிவு

கோயில் குடிகொண்ட கோமகனை கும்பிடாய்
நாயின்பின் சென்றதற்கு வாலாட்டி -- பேயின
னாயி யவர்பின் நடந்தாய் உனக்கெதற்கு
தாயின் தமிழும் பகர்

அறிவிலா நாயே அறிகிலைநீத் தெய்வம்
சொறிநாயே போகிலைநீக் கோயில் --- நெறியாம்
உலகின் வழியது கும்பாபி சேகம்
தலைகள் மொழிவிருப்பம் தான்

நேரிசை ஆசிரியப்பா

கோயிலுள் நுழைந்து கும்பிடு கடவுளை
கோனையே பேசும் பின்னரே மொழியை
நாயினும் இழியோய் நாட்டில் முப்பது
மொழியோர் அத்தனாம் சிவனைத் தொழுவது
அறிகி லையோ பாவிநீ வடக்கன்
ஈசனைத் தொழரா மேசுரம் வருவன்
நம்மவன் வடக்கு கங்கைநீர் ஆடியே
விசுவ நாதனைத் தொழுதல் வழக்கம்
நாயகன் திராவிடன் சொல்லைக் கேட்டு
கோயில் சென்ற தில்லை பாவிநீ
மொத்த பாரதம் சிவனை வணங்க
எங்கெங் கும்சிவ மயமே மொழியதில்
பிரச்சினை உனக்கே ஏனடா
கடவுளுக் கெம்மொழி செம்மொழி பிள்ளாய்

எழுதியவர் : பழனி ராஜன் (1-Mar-23, 9:26 am)
பார்வை : 90

மேலே