எழுந்து வா பெண்ணே

அடுப்பாங்கரையில் அடைந்து கிடந்தது போதும் எழுந்து வா பெண்ணே

அகிலம் போற்றும் உன் முயற்சியை எழுந்து வா

அடை காத்து தேங்கி கிடந்தது போதும் எழுந்து வா

உன் முயற்சி தித்திக்கும் தீபாவளியை மாறும் எழுந்து வா

உன்னை வெல்ல இங்கு ஒருவரும் கிடையாது எழுந்து வா பெண்ணே

தோள் கொடுக்க தோழனும் கணவனும் ஒருவன் உன் பின்னே நிற்பான் எழுந்து வா

உன் எண்ணமே ஏணியாய் மாறும் உன்னை எட்டிப் பிடிக்க பலர் காத்துக் கொண்டிருப்பார் எழுந்து வா பெண்ணே வா

எழுதியவர் : (8-Mar-23, 12:09 pm)
Tanglish : ezhunthu vaa penne
பார்வை : 56

மேலே