அறிவுரை வீண் அழிவே

சிந்தியல் பாடல்

கல்லா தானுங் கற்றவர்
சொல்லக் கேளான் துரோகி
பொல்லா தான்வழி போவார்
அல்லல் உற்ற வளவில்
தொல்லை என்று முணரார்
செல்ல அழிவர் திண்ணம்

அங்கங்கே எதுகைகளும் ஒன்று மூன்றில் மோனையும் அவசியம்
இப்பாடலில் இருதளை கள் கொண்ட முச்சீர் பாடல்கள்

இதனுடைய வரியில் மொத்தம் 7 எழுத்துக்கள் மட்டும் இருக்கும் .
இப்படியே 8 எழுத்துக்களை. அல்லது. 9 எழுத்துக்கள் கொண்டதாகவும் அமைப்பர் என்கிறது தொல்காப்பியம்.
புதுக்கவிதை முயற்சிப்போர் இந்த வழியிலாவது எழுதி தமிழின்
இலக்கணத்தைப் பின்பற்றலாம்

யாரும் முயன்று எழுதலாம்




....

எழுதியவர் : பழனி ராஜன் (12-Mar-23, 1:34 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 58

மேலே