ஒப்பாரி

அம்மா
தொப்புள்கொடி
அறுவதற்கு முன்பே
"ஆ"வென்று அலறினேனா?
அறுந்தபின்பு அலறினேனா?
இல்லை
உன்பந்தம் அறுந்ததற்காக
அலறிஇருப்பேன்

அப்போதுஅலறிய சத்தம்
இன்னும் ஓயவில்லை!

வளர்ந்தபின்பு ---
பாசத்திற்குஅழுதேன்
நேசத்திற்குஅழுதேன்
காதலுக்குஅழுதேன்
காமத்திற்குஅழுதேன்

அன்புக்குஅழுதேன்
இழப்புக்குஅழுதேன்
நட்டத்திற்கழுதேன்
கஷ்டத்திற்கழுதேன்
யாரும்எனக்குஇல்லையே
என்றுஅழுதேன்

மரணம்வந்து
என்அழுகையை
நிறுத்திவிட்டது

மரணம் என்
மறுதாயா?

நான்தூங்கிய பின்பு
எல்லோரும்
மார்பிலும் வயிற்றிலும்
அடித்துக்கொண்டு அழுதார்கள்
என்ன
அழுதவர்கள்எல்லாரும்
தொப்புள்கொடி அறுந்தவர்களா?

இல்லை இவர்களெல்லாம்
நான்வாழும்போது
அழவைத்தவர்கள்

அழுகையைநிறுத்திவிட்டானே
என்றஆதங்கத்தில்
அழுகிறார்கள்
அதுமற்றவர்களுக்கு
ஒப்பாரியாய் தோன்றுகிறது

எழுதியவர் : (17-Mar-23, 12:01 am)
சேர்த்தது : பபூதா
பார்வை : 34

மேலே