கனவான காதல்

கனவான காதல்..
-----------------

கனிவான உள்ளத்தில் கனிந்திட்ட பாசம் /
இனிதான துவக்கத்தின்
இயல்பான நேசம் /

இரவில்லைப் பகலில்லை
எப்போதும் உன்னை /
வரவென்று வைத்தேனே
வாழ்வெல்லாம் என்னில்/

துயரங்கள் மிகுந்தாலும்
துறப்பேனோ நின்னை /
உயரங்கள் சென்றாலும்
உதிர்ப்பேனோ உயிரே/

இதயங்கள் இணைவதோ
இயற்கையின் கடமை/
உதயங்கள் ஒவ்வொன்றும்
உனக்கானப் பெருமை/

கனவான நம்காதல்
நனவாகும் போது /
கனலான
எதிர்ப்பெல்லாம்
கானலாய்ப் போகுமே!

-யாதுமறியான்.

எழுதியவர் : .-யாதுமறியான். (19-Mar-23, 3:12 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 140

மேலே