தெளிவு

ஏகாந்த பொழுதின் மேகம் உடனான உரையாடலில் நிறைய பேசி தெளிவு பெறுகிறேன்.
நாளும் தொடரும் மாய பயணத்தில் எண்ணெற்ற முகங்கள்..
குறைகளை பட்டியலிடும் முகங்கள்
நடை பாவனையை மாற்றிக்கொள்ள பரிந்துரைக்கும் முகங்கள்
கொஞ்சம் வளர்ந்தால் போதும் பழச மறந்து தலைகணத்துல ஆட ஆரமிச்சிடுவ என மெசெஞ்சரில் வாழ்த்து மழையை பொழியும் முகங்கள் என நாளும் பல்வேறு முகங்களை கடந்துதான் செல்கிறேன் .
ஏனோ ஒரு புது தெளிவு நானாகிய நான் என்னும் ஆணவம்.
கடந்து வந்த பயணத்தை சற்று திரும்பி பார்க்கையில் ஓர் கர்வம்.
காதலும் இல்லை பயணத்தில் உறுதுணை என உறவு எவரும் இல்லை வலிகளை தவிர
இருப்பினும் தனியாக போரிட்டு மீட்சி பெற்று வரும் கர்வம் - யாராலும் எந்த பயனும் இருந்ததில்லை
என்னும் பட்சத்தில் கடந்து செல்லும் மேகங்கள் போல் பல்வேறு முகங்களை நாளும் கடந்துதான் செல்கிறேன்.

எழுதியவர் : Kowsalya sekar (20-Mar-23, 12:36 am)
சேர்த்தது : கௌசல்யா சேகர்
Tanglish : thelivu
பார்வை : 88

மேலே