உன்மடியில் மகிழ்ந்திட

நெரிசை வெண்பா


மேன்மைக் கவியென மேட்டிமைச் சொற்தேர்ந்து
தேன்சுவை கூட்டிச்சொல் தித்திக்க – கோன்நானுன்
மான்றி மடியில் மகிழ்ந்துற வாடுவேன்
சேல்விழி யாளே,நீ செப்பு!


மான்றி = மயங்கி


......

எழுதியவர் : பழனி ராஜன் (30-Mar-23, 7:11 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 199

மேலே