சத் சித் ஆனந்தம்

சித்தாகா சச்சேத்திரம் சிதம்பரம்
நித்தம் நடம்புரிவான் நடராசன்
சித்திரப் பாவைசிவ காமியுடன்
பத்தியில் தொழுவான் பதஞ்சலி

---பஞ்ச பூத சேத்திரங்களில் ஆகாச ஆலயம் சிதம்பரம்
பதஞ்சலி வியாக்கரபாதர் நடராசரைப் போற்றிய
உன்னத முனிவர்கள் பிற பூத ஆலங்கள் பற்றியும் பார்ப்போம்

சித்தாகாசத்தில் ஆயிரம் நிலவுக்கொப்பான அபிராமி முக தரிசனத்தில்
பட்டர் ஆழ்ந்திருந்த போதுதான் மன்னன் அன்றைய திதிகேட்க
அமாவாசையை பௌர்ணமி என்று மாற்றிச் சொல்லிவிட்டார்
சித் + அம்பரம் = சிதம்பரம் அம்பரம் என்றால் ஆகாசம்

சத் சித் ஆனந்தம் என்பர் மேலோர் தத்துவம் அவர்களிடம் தெரிந்து கொள்ளுங்கள்
புத்தக அறிவெல்லாம் அதற்குப் போதாது
இச் சொற்களின் கூட்டில் பிறந்த பெயர்தான் சச்சிதானந்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Mar-23, 10:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : sath chit aanantham
பார்வை : 28

மேலே