அவள் நடை அழகு

ஆற்றங் கரையில் மெல்லிடையாள் அவள்
சுற்றி சுற்றிப் பார்த்து மெல்ல மெல்ல
நடந்து வந்தாள் அவள் பின்னே
நடந்து வந்தது அன்னம் ஒன்று
அது முன்னே வேகமாய்ப் போகவில்லை
இவள் நடை அழகில் தன்னை
மறந்த மடஅன்னம் அது இவள்
நடையைப் பழக முயலுகிறதோ
அன்ன நடையின் அழகையும்
விஞ்சியதோ அவள் நடை அப்படித்தான்
என்று தூண்டியது என்மனதில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (31-Mar-23, 8:10 pm)
Tanglish : aval nadai alagu
பார்வை : 111

மேலே