திருப்தி கிடைக்காது

திருப்தி கிடைக்காது
ஒருவரையும் உங்களோடு
ஒப்பிட்டுப் பார்த்து
உங்களை நீங்களே
குறைத்து மதிப்பிடாதீர்கள்
இவ்வுயிர் இறைவன் தந்தது
இழிவு படுத்தி விடாதீர்கள்

எவருடனும் ஒப்பிடாமல்
நேர்மையோடு உன் திறனை
நீயே எடை போடு
நாமும் உயர்ந்து நிற்பதை
நாம் மட்டுமல்ல
நாடே அறியும், , போற்றும்

உண்மை நிலை அறிந்து
உனது உள்ளம் பூரிக்கும்
அதை விட்டு விட்டு
திருப்பதி வெங்கடேசனை
துதித்து வேண்டி நின்றாலும்
திருப்தி கிடைக்காது.

எழுதியவர் : கோ. கணபதி. (1-Apr-23, 9:08 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 59

மேலே