சிதறல்கள்

சிதறல்கள்..!

படிக்கட்டுகள்
அமைதியாகத்தான்
இருக்கின்றன
எத்தனை பேர்
மிதித்து சென்றாலும்

எதையாவது
வாரி சுருட்டி
கொண்டு போனாலும்
எங்கோ ஒரு
இடத்தில் வீசிவிட்டுத்தான்
போகிறது இந்த காற்று

பொங்கி வழிந்த
பால்
தன்னை சுட்டவனை
அழிக்கத்தான்
வேகமாக கீழிறங்கி
போகிறது

வளைந்த வரிகளாக
முக சுருக்கங்கள்
புளிப்பாய்
சுவைத்து கொண்டிருக்கும்
பாப்பாவின்
முகத்தில்

அவசரமாகத்தான்
ஓடி கொண்டிருக்கின்றன
நாட்கள்..!
அசை போட
கூட அவகாசம்
கொடுக்காமல்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (7-Apr-23, 3:50 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : sitharalkal
பார்வை : 50

மேலே