இறுதிப் பயணம்

இறுதிப் பயணம்

பறை அறை கையில்
பரவசப் படுமா பிணம்,
அறிந்தவர் எவர் உலர்
அகிலத்தில்...

இறுதிப் பயண வழியில்
இடருமோ கல்லும் முள்ளும்,
கண்டவர் கருத்தாய் பதிவர்
கலியுகத்தில்...

காத் திருந்து அழைக்க
வருமா புஷ்பக வாகனம்
அல்ல, கால்கள் கடுத்திடுமா
அரைவழியில்....

கோடியோ, தெருக் கோடியோ
நெற்றி நாணயம் ஒற்றையே,
கொட்டிக் கொடுப்பவர் யார்
இறுதியில்...

இறுதி சூட்சுமமது அறிந்திடின்
அங்கும் பெருபிண்டம் மாற்றும்
பண்டம் நோகாது பயணிக்க
இறுதியில்....

கலியுக பெரு முதலை
பழகிய பலகால லஞ்சம்,
மறந்திடுமோ அவரது நெஞ்சம்
இறுதியில்....

எழுதியவர் : கவிபாரதீ (12-Apr-23, 9:28 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 93

மேலே