ஏழைப்படும் பாடுனக்குத்

எண் சீர் விருத்தம்

திருவருட்பா

வாழையடி வாழையென வந்ததிருக் கூட்டம்
,.......மரபினில்யான் ஒருவனன்றோ வகையறியேன் இந்த

ஏழைப்படும் பாடுனக்குத் திருவுளச்சம் மதமோ
........இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ

மாழைமணிப் பொது நடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
........மகன்லனோ நீயெனக்கு வாய்த்ததந்தை யலையோ

கோழையுல குயிர்த்துயரம் இனிபொறுக்க மாட்டேன்
........கொடுத்தருள்நின் அருளொளியைக் கொடுத்தருளிப் பொழுதே


......

எழுதியவர் : பழனி ராஜன் (12-Apr-23, 9:45 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 31

மேலே