வகுத்துத் தந்திடும் பாதையை

நெஞ்சில் தைத்த முள்ளாகும்
நிகழ்வுகள் சில வாழ்வில் !
நினைத்தால் இதயம் இதமாகும்
நினைவில் பல அனுபங்கள் !
இழக்கும் உறவால் இறுகிய
மனது உருக்கும் உடலை !
பிரிந்த நட்பால் வாடிடும்
நெஞ்சம் தளர்த்தும் வலிவை !
சுகமும் சோகமும் கடப்பது
நகரும் வாழ்வில் நியதியே !
நிலையில்லை ஏதும் இங்கு
நினைவை நீக்கு உள்ளமே !
பருவத்தில் மாற்றம் நிகழ்ந்தும்
காக்குது பூமியும் நம்மை !
உருவத்தில் கரையும் உடலும்
காட்டுவது கூடும் வயதை !
எதிர் கொள்வோம் வாழ்வை
ஏற்றிடு புதியதாய் கொள்கை !
களைந்திடு மனதில் சோர்வை
விதைத்திடு நெஞ்சில் நம்பிக்கை !
புகுத்திடு உள்ளத்தில் சமத்துவம்
நிறுத்திடு நெஞ்சில் இத்தத்துவம் !
பகுத்துப் பார்த்து வாழ்ந்ததால்
வகுத்துத் தந்திடும் பாதையை !
பழனி குமார்
16.04.2023