தென்னையிள நீரென்றே தேர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(ஏந்திசைச் செப்பலோசை)

கன்ன(ல்)மொழி பேசிவருங் கன்னியவள் சொல்லுகின்ற
இன்மொழியைக் கேட்கின்றேன் இன்புறவே - இன்னுமென்ன
என்றனுக்குத் தானினிக்கும்; ஏதுசொல்வேன்? அச்சொற்கள்
தென்னையிள நீரென்றே தேர்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Apr-23, 2:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே