மானிடனே மறவாதே

ஈடேது இணையேது நமை
ஈன்றவளுக்கு என்றும்
இவ்வுலகில் !

மானிடனே மறவாதே உன்
மனதில் கொள் இன்றும்
என்றும் !

ஒதுக்காதே ஒருநாளும்
ஒருகாலும் ஒரு நொடியும்
தாயை !

கருவிற்கு உயிர் தந்து
உருவாக்கி உனை இயங்க
உழைத்தவள் !

உலகை காண உன்னை
விழி திறந்த மழலையாக
பிரசவித்தவள் !

அமுதூட்டி அன்பூட்டி நாளும்
அறிவூட்டி நெறி பிறழாது
ஆளாக்கியவள் !

நோயுற்றக் காலத்தில்
சேயாக செவிலியாக
பணிவிடை செய்திடு !

உயிரெழுத்தின் முதலெழுத்து
" அ "
குடும்பத்தில் முதலெழுத்து
அன்னை !

வணக்கத்திற்குரியவர்
வணங்க வேண்டியவர்
என்றும் தாய் !


பழனி குமார்
17.04.2023

எழுதியவர் : பழனி குமார் (18-Apr-23, 6:17 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 364

மேலே