கண்ணிமை யாதுனைக் காண வின்பமே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(1, 3 சீர்களில் மோனை)

வெண்ணிலா வீசிடும் வெள்ளி வீதியில்
கண்களுங் கவிதையைக் களிப்பில் சொல்லுதே!
ஒண்டொடி வானிலே ஒளிரும் தண்ணிலா
கண்ணிமை யாதுனைக் காண வின்பமே!

- வ.க.கன்னியப்பன்

மேலேயுள்ள வாய்பாடும், இலக்கணக் குறிப்பும் வாசித்துவிட்டு, பெண்மை என்ற தலைப்பில் ஒரு கலிவ்ருத்தம் படைக்க முயலுங்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Apr-23, 10:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே