காலை நேர மதி மயக்கம்

மண் மணம் கண்டு
வான் மகள் அளித்த மழையில்
அவளின் பாதம் பதிய வந்தது மல்லி மணம்....

அவளின் இதழ் அசைவு
மனதில் செதில் செதிலாய் மாற்றம்...

ரம்மிய குரல்...!!
இனிய பா வகை ராகமாக
அவளின் சிரிப்பு சத்தம் கேட்டதும்
சிவங்கிபோல் எட்டி பார்த்து எண்ணினேன்...!!

அவள்...
செவியோடு கார் கூந்தலை...
பளிங்கு விரல் கொண்டு
அகற்றையிலாவது காரிகையின் முகம் தெரியாதா என்று....

பட்டென்று அவள் திரும்ப
சட்டென்று
விம்மி எழுந்தேன் கனவிலிருந்து....
-இந்திரா

எழுதியவர் : இந்திரா (29-Apr-23, 10:11 am)
சேர்த்தது : இந்திரஜித்
பார்வை : 234

மேலே