பொன்னெழில் காலைப் பொழுது - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கந்தன் பெருமையினைக் காலமெலாம் பேசலாம்
சொந்தம் பெருகிடச் சுற்றமெலாம் - பந்தமென
இன்பமுடன் வாழ்வும் இயங்கிட நல்வரவே
பொன்னெழில் காலைப் பொழுது!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Apr-23, 3:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே