ஊர்வசிஎன் றேபார்க்கும் ஊர் - இருவிகற்ப நேரிசை வெண்பா

இருவிகற்ப நேரிசை வெண்பா
(ஏந்திசைச் செப்பல் ஓசை)

உண்மையன்பு கொண்டவளே உன்பெயரைச் சொல்லிவிடு;
தண்மையென நற்குணத்தைத் தான்கொண்டு - கொண்டலெனத்
தேர்ந்ததொரு வானத்தில் திங்களன்ன உன்றனையே
ஊர்வசிஎன் றேபார்க்கும் ஊர்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-May-23, 6:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே