சூரியா - கத்தியா

சூரியா - கத்தியா
@@@@@@@@
கொள்ளுப்பாட்டி: ஏண்டா பேரப் பையா பக்கத்து வீட்டு தாமரைக்குப் பொறந்த பெண் குழந்தைக்கு என்ன பேரு வச்சிருக்கிறாங்க?
@@@@@
சூரியா.
@@@@@#
உன்னோட குழந்தைக்கு ஏன் இன்னும் பேரு வைக்கல?
@@@@@@
எந்தப் பேரை வைக்கிறதுன்னு ஒரே குழப்பம் பாட்டி.
@@@@@@
உன்ற மனைவியைக் கூப்புடு. அவ என்ன சொல்லறானு கேப்போம்.
(மனைவி வருகிறாள்) ஏண்டி தென்றல் உங்க பெண் குழந்தைக்கு பேரு வைக்கிறதைப் பத்தி உன்னோட முடிவு என்னடி?
@@@@@@@
நாங்கள் முடிவு பண்ணி வச்சிருந்த 'சூரியா'ங்கிற பேரை பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு வச்சிட்டாங்க. அதுக்குப் பொருத்தமான பேரை எங்க குழந்தைக்கு வச்சாத்தான் நல்லது. நீங்களே ஒரு பேரைச் சொல்லுங்க பாட்டி.
@@@@@@@@
சாமிக்கு வேண்டுதல் வச்சு கெடாய் வெட்டிப் பொங்கல் வச்சு படச்சு குழந்தைக்குப் பேரு வைக்கிறதுதான் நம்ம ஊரு வழக்கம். சூரி ஆட்டுத் தோலை உரிக்கப் பயன்படுத்தற கத்தி. அதைத்தான்
அவுங்க பெண் குழந்தக்கு வச்சிருக்கிறாங்க போல இருக்க்குது. நம்ம குழந்தைக்கு 'கத்தியா'னு பேரு வையுங்கடி. அந்தப் பேரு தான் சரியான போட்டிப் பேரா புதுமையா இருக்கும். 'கத்தியா' மாதிரி இந்திப் பேரெல்லாம் இருக்குது.
@@@@@@@@@
நல்லது பாட்டிம்மா. 'கத்தியா'ங்கிற பேரைக் கேட்டா நம்ம ஊர் மெத்தப் படிச்ச மக்களே "இனிமையான இந்திப் பேரு. ஸ்வீட் இந்தி நேம்"னு சொல்லிப் பாராட்டுவாங்க. ரொம்ப நன்றிங்க பாட்டிம்மா.

எழுதியவர் : மலர் (18-May-23, 10:37 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 43

மேலே