நீரும் நெருப்பும்
தனக்கு பின்னால் இருக்கும் போதும் பயம் இல்லை
தன்னோடு இருக்கும் போதும் பயம் இல்லை
தனக்கு முன்னாள் இருக்கும் போதும் பயம் இல்லை ...
யாருக்கு பயம் இல்லை ?
ஆழிக்கு
யாரை கண்டு ?
ஆதவனை கண்டு
ஏன்?
அது ஒரு காதல் வயம் !!
எட்டாத கதிரவனுக்கும்
உப்பான கடலுக்கும் என்ன காதல் ?
ஒட்டாமல் இருந்தால் காதல் இல்லியோ?
பட்டும் படாமல் காதல் செய்யும்
நீர்க்காற்றையும் கதிரையும் கண்டு பார்....
பார் ஆளும் நீருக்கும் நெருப்புக்கும் உள்ள காதல் புரியும்!!!
அது ...
நிலம் கண்டது இல்லை
மேல் தளம் பூண்டது..!!
ஆதாவனுக்காக
தாவி குதிக்கும் ஓயாத அலை
நடத்தும்
மறைமுக காதல் இது ....
-இந்திரா