காலையில் காதல் எழுதும்

விடிகாலைப் பொழுதில்
---விரல்தடவ வீணையில்
----ராகம்
துடியிடைபோல் துவளும்
----கொடியில் மலர்களின்
-----பூவாசம்
கடைவிழியில் காலையில்
-----காதல் எழுதும்
------பூவிழி
நடைத்தமிழில் நானெழுத
-------வோவோர் கவிதை
-------சொல்தோழி

எழுதியவர் : Kavin charalan (4-Jun-23, 7:56 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 115

மேலே