மாறப்போவதில்லை

மாடுகளும், ஆடுகளும்
மந்தை மந்தையாக
ஒற்றுமையோடு
ஒன்று சேர்ந்து
உயிர் வாழும்போது

காட்டு யானைகளும்
காக்கையும், பறவைகளும்
கூட்டமாக இனத்தோடு
அன்போடு உறவாடி
ஆசையாக வாழ்வதும்

மனிதாபிமானமற்ற
மனிதர்களைப்போல்
எரியப்பட்ட எச்சில் சோற்றுக்கு
எரிச்சல் கொண்டு நாய்கள்
வெறி கொண்டு தாக்குவது

முறையா? சரியா?
மற்றொரு நாயை நேசிக்க
முடியலையே அந்த நாய்க்கு,
மனிதாபிமானத்தை கற்று தந்தாலும்
மாறப்போவதில்லை.

எழுதியவர் : கோ. கணபதி. (4-Jun-23, 5:43 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 92

மேலே