அவள் முன்

வெயில் என சண்டையிடுகிறாய் - அவளிடம்
பின் தனல் என மண்டியிடுகிறாய் - அவள் முன்
அது ஏனடா என கேட்பவருக்கு...

அவள்
மனமோ உடலோ - எதாயினும்
நான்
அருகிலோ தொலைவிலோ - எங்காயினும்

தயக்கம் தள்ளி ; வெட்கம் களைந்து
தன் வலியையும்,வேதனையையும் பகிரும்
"அவளின்" ஒரே "ஆண்" நான் என்னும் காரணத்தினால்

நான் சண்டையிடுவேன் - மண்டியுமிடுவேன் - அவள் முன்

- தினேஷ் ஜாக்குலின்

எழுதியவர் : தினேஷ் ஜாக்குலின் (5-Jun-23, 12:23 pm)
சேர்த்தது : Dinesh Jacqulin
Tanglish : aval mun
பார்வை : 261

மேலே