வண்ண வண்ண பூக்களும் ஏங்குதடி 555

***வண்ண வண்ண பூக்களும் ஏங்குதடி 555 ***


என்னுயிரே...


உன்னை முதல்முறை
நான் பார்த்தபோது...

நீ பேசும் சிலையா
நடந்து செல்லும் ஓவியமா
...

பேரழகி உன்னை
கண் இமைக்காமல் ரசித்தேன்...

மழையில் நனைய உனக்கு
பிடிக்கும் என்கிறாய்...


கொட்டும் மழையில் உன்னுடன்
நான் சேர்ந்து நனைய ஆசை...

வானவில்லை நீ
கைநீட்டி
அழைக்கும் போது...

நான் உன் கைகோர்த்து
நனைய வேண்டுமடி...

வண்ண வண்ண பூக்களும்
பொறாமை கொள்ளுதடி...

நீ பேசும்
பூவழகி என்று...

பூக்களோடு சேர்ந்து புகைப்படம்
எடுக்கு
ம் போதெல்லாம்...

வண்ண வண்ண
பூக்களுக்கும் பொறாமை...

செதுக்கிய உன்
மேனி அழகை கண்டு...

உன் கூந்தல் ஏறிய
பூக்களும் ஏங்குதடி...

வாடிவிட்டால் நாம் மண்ணில்
விழுந்துவிடுவோமோ என்று...

பேசும் பூவழகே நான்
விழுந்துவிட்டேன்...

உன் அ
ன்பு
என்னும் பேரழகில்.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (10-Jun-23, 7:56 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 389

மேலே