முற்பகல் செய்வின் பிற்பகல்

முற்பகல் செய்வின் பிற்பகல்
++++++++++++++++++++++++

நெல்விதை விதைக்க
எள்ளும் தளிராது/
நல்லவை செய்திடவே
அல்லவை நெருங்காதே/

கொடிக்கும் தேர்கொடுத்த
கோ வாழ்ந்த மண்ணிலே/
நொடிக்கு இறக்கின்றனர்
நோயின்றி பசியாலே/

கருணை மனமுடனே
கரமும் உதவிட/
அருளும் ஆசிர்யுன்டு
ஆனந்தமாக வாழ்ந்திடவே/

பிறப்பது இறப்பதற்கல்ல
பிறர்க்கு உதவிடவே/
மறுத்திட வாழ்வோர்
மண்ணாங்கட்டிக்கு ஒப்பவார்/

சுவற்றில் வீசியப்
பந்தாகவே திரும்பியே/
முற்பகல் செய்வின்
பிற்பகல் விளையுமே/

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (27-Jun-23, 6:06 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 53

மேலே