விதிமுறை யின்றித் தாந்தான் விரும்பிடும் போக்கில் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)

எதுசரி எது,தப் பென்றும்
..இனிதறிந் தாலே மட்டும்
அதையதைச் சரியா கத்தான்
..அழகுடன் செய்ய லாகும்!
விதிமுறை யின்றித் தாந்தான்
..விரும்பிடும் போக்கில் பாட்டு
மதியிலி போலே கூறல்
..மனநிறை வாமோ சொல்வீர்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-23, 3:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே