வாழ்க்கை விளையாட்டு

வாழ்க்கை விளையாட்டு !!
💜💜💜💜💜💜💜💜💜💜💜

வாழ்க்கை என்பது விளையாட்டு இங்கே

வருவோர் போவோர் பகடைக் காய்கள்!

ஆடும் களத்தினைத் தேர்ந்து கொண்டு

அயரா உழைப்பினால் வெற்றி கண்டு

நாடும் போற்றிடப் புகழைப் பெற்று
நலமாய் வளமாய் ஓங்கு நண்பா!

நட்பும் உறவும் பகையாகும் சமயத்தில்

வெட்கிடத் தவைவாங்கும் ! வேண்டா எதிரியோ

நட்போடு வெற்றிக்குத் துணையாய் நிற்பதுண்டு !

வாழ்வின் சூட்சுமம் அறிந்து விட்டால்
வீழ்த்திட யாருமே இல்லை யப்பா !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (19-Jul-23, 6:06 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 50

மேலே