கற்றபின் நிற்க

கற்றபின் நிற்க
××××××××××××××
சங்கத்தமிழ் மூன்றினை
சங்கமிக்கும் கடலளவு
மங்காது கற்றிட
மங்களமாகும் வாழ்க்கையே

தானாகக் கற்றே
தானமாகக் கற்பி
தானாகும் உள்ளதெல்லாம்
தானாவாய் கடவுளே

விலையற்றக் கல்வியை
விலையாக்கி வியாபாரமாக
விளைவு ஏடாறிய
ஏழை எழத்தறியாரே

கற்றல் சிறப்பாகும்
கற்பித்தல் சிறப்பானால்
கற்பவர் எழுச்சி
கற்பிப்போர் உச்சரிப்பே

நூலெல்லாம் இணையம்
நுழைந்து கணினியாயிருக்க
நஞ்சனெனும் காய்
நாடியே கெடுவாரே

மறைகின்றச் சாதியை
கூத்தாடிக் கூட்டமொன்று
திரையில் புகட்ட
திரும்ப மலர்கிறதே

ஓடும் விளையாட்டு
ஓய்ந்து தேய்ந்து
ஒடுங்கிய கைப்பேசியால்
ஓங்கியது சோம்பலே

அமுதத்தமிழை உரைப்பது
அவலமென உரையாட
அலங்காரிகளே அந்நியமொழியில்
அசத்தலாகப் பேசாதீர்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (23-Jul-23, 6:21 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 73

மேலே