நீ தந்த ஏமாற்றம் சாதா-ரணமல்ல!

என்னை நீயும் ஏமாற்றி
எப்படி இப்படிச் சிரிக்கின்றாய்?
இன்னும் உன்னைப் பாராட்டி
எதற்கு நானும் அலைகின்றேன் ?

மின்னிய காதல் மின்னலாய் மறைந்து
வேகமாய் ஒளிந்தது - நான்
எண்ணிய வாழ்க்கை உன்னால்தானே
எதுவுமின்றி அழிந்தது (என்னை )

மெல்லிய இதழில் மேவிய புன்னகை
மேகமாய் விலகியது - நீ
கிள்ளி எறிந்த காதல் ரோஜா
கல்லறை நோக்கி ஏகியது (என்னை)

மயக்கங்கள் தந்த பழக்கம் ஒன்று
மண்ணோடு மண்ணானது - இனி
மார்க்கங்கள் இல்லா வாழ்க்கை தானே
மனசுக்குக் கண்ணானது (என்னை)

என்னை வாட்டிய வண்ணக் கண்கள்
வருந்தும் காலம் வரும் - அன்று
என்னைப் பார்க்க எண்ணி வருவாய்
இறந்தேன் என்று வரும் - நான்
இறந்தேன் என்று வரும் (என்னை )

எழுதியவர் : முத்து நாடன் (14-Oct-11, 11:48 pm)
சேர்த்தது : muthunaadan
பார்வை : 360

மேலே