விண்ணோடும் முகிலோடும்

விண்ணோடும் முகிலோடும்
×××××××××××××××××××××××××
விண்ணோடும் முகிலோடுமாக
நட்பும் உறவாகுமே
மண்ணோடு பயிராக
உதவியும் செய்யுமே

உளியோடு சேரும்
கல்லும் சிலையாவதாக
நல்ல தோழமை
நல்லொழுக்கம் தருமே

ஆற்றில் சாக்கடை
கலக்க அசுத்தமாவதாகத்
தீயோரின் பழக்கம்
தீமை விளைவிக்குமே

மலரோடு சேர்ந்த
நாரும் மணப்பதாகக்
கற்றோரிடும் சார்தல்
சான்றோன் ஆக்குமே

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (27-Jul-23, 9:43 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 229

மேலே