இராமன் கருடனைப் புகழ்தல் - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)
ஆரியன் அவனை நோக்கி,
..‘ஆருயிர் உதவி, யாதும்
காரியம் இல்லான் போனான்;
..கருணையோர் கடமை ஈதால்;
பேரிய லாளர், “செய்கை
..ஊதியம் பிடித்தும்”என்னார்;
மாரியை நோக்கிக் கைம்மா(று)
..இயற்றுமோ, வையம்? என்றான்! 271
- நாகபாசப் படலம், யுத்த காண்டம் கம்பராமாயணம்