தீ நிமித்தங்கள் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(புளிமா தேமா புளிமா கருவிளம்)

உதிர மாரி சொரிந்த துலகெலாம்;
அதிர வானம் இடித்த தருவரை
பிதிர வீழ்ந்த தசனி; ஒளிபெறாக்
கதிர வன்த னையூரும் கலந்ததால்! 81

- இராவணன் வதைப் படலம், யுத்த காண்டம், கம்ப ராமாயணம்

பொருளுரை:

உலகு முழுவதிலும் இரத்த மழை பொழிந்தது; முகில்கள் உலகம் அதிரும்படி இடியொலி எழுப்பின; பெருமலைகள் சிதறும்படி இடி (மலைகள் மேல்) விழுந்தது; ஒளி இழந்த ஞாயிற்றை ஊர்கோளும் சூழ்ந்து கொண்டது!

ஊர்கோள் - பரி வேடம்; பரிவேடம் கால அருக்கன் உதயத்துச் சாரில் வட்டந் தலமழிவாம் என்பர் முன்னோர்.

எழுதியவர் : கம்பர் (6-Aug-23, 11:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே