இயற்கையே இன்பம்
இயற்கையே இன்பம்
---------------------------------------
ஆறும் ஓடும்
அழகியப் பெண்ணாக /
கழிவுநீரைக் கலந்து
கற்பைச் சூறையாடி/
கூவமாக்கி கையளவு
குடிக்கும் நீர்க்கு /
கையேந்தி நிற்கிறோம்
அன்டை மாநிலத்திடம் /
மணலும் அலையும்
மனதைக் கவரும் /
அழகை ரசித்து
அசுத்தமாகக் நெகிழியை /
கரையில் குவித்து
கடலலையில் கலக்கிறோம்/
துள்ளும் கயல்களுக்கு
துயத்தை தருகிறோம் /
இயற்கைக் காற்றும்
இன்னிசையாகத் தாயின் /
தாலட்டினைப் பாடியே
தழுவியே சென்றிடும் /
உயிர் கொடுக்கும்
உலவிடும் காற்றில்/
புகையினைக் கலந்து
நஞ்சாக மாற்றுகிறோம்/
வனத்தை அழித்து
வரம் கேட்கும் /
மழை வேண்டி
மனிதக் கூட்டமே /
மரத்தை வளர்த்தால்
மழைத் தானேவரும் /
இயற்கையே இன்பம்
இயன்றவரை காத்திடு /
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்