வனத்தின்பொன் மான்களின் வண்ணவிழி ஆட

பனையின் பதநியைப் பார்வையில் ஏந்தும்
உனையொருத்தி வெல்ல உலகினில் இல்லை
வனத்தின்பொன் மான்களின் வண்ணவிழி ஆட
சுனைநீ ரருந்து சுவைத்து

வனைந்தான் குயவனோர் வண்ணச்செம் பானை
மனைவி நிரப்பினாள் மண்பானை நீரால்
சுனைநீ ரருந்து சுவைத்து

புனைந்திடும் பூங்கவிதை புன்னகையால் தந்தாய்
நினைவினில் நித்தமும் நீவான வில்போல்
நினைந்து எழுதுகிறேன் நீலவிழி தந்தாய்
சுனைநீ ரருந்தச் சுவைத்து

---டாக்டர் VKK நல்கிய ஈற்றடி சுனைநீ ரருந்து சுவைத்து கொண்டு எழுதிய கவிதைகள்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Aug-23, 6:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே