அடியே கருவாச்சி…

அடியே கருவாச்சி—-
❣️❣️❣️❣️❣️❣️❣️

அடியே கருவாச்சி
எல்லாம் மறந்தாச்சி /
விடியா குடிசையிலே
வெளக்கா புகுந்தாச்சி /

நெஞ்சம் நெறைஞ்சாச்சு
நெறமும் ஒருகேடா/
தஞ்சம் நீயென்றே
தலைசாய்ச்சிப் படுத்தாச்சு /

ஊரும் ஒறவுகளும்
ஒதுங்கித்தான் போனாலும் /
போராட வந்தாலும்
புறமுதுகு காட்டேண்டி /

படையும் நடுங்காதோ
பார்வை விழுந்தாலே/
தடையும் வருமோடி
தங்கமே இளிமேலே!

சாமி தந்தவொன்ன
சரசரக்கும் சேலையிலே /
பூமி உள்ளமட்டும்
பொட்டுவச்சிப் பாப்பேண்டி//

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (28-Aug-23, 3:51 pm)
பார்வை : 108

மேலே