மனமே என்னைத் தேடாதே…
மனமே என்னைத் தேடாதே !
$$$$$$$$$$$$$$$$$$
தொலைந்து நெடுநாள்
ஆனதுவே - எங்கும் /
அலைந்து திரிவதால்
ஆவ துண்டோ /
ஊனும் உயிரும்
கலந்ததுவே - அந்த
தேனும் வாழ்வினைத்
தித்திப்பாய் மாற்றியதே/
இரண்டும் ஒன்றாய்
சேர்ந்ததுவே - எங்கும் /
புரண்டிடும் மகிழ்ச்சி
பூரிக்கச் செய்ததுவே /
மனமே என்னைத்
தேடாதே - மங்கையின்
இனிய நெஞ்சினில்
இருப்பேன் வாடாதே!!
-யாதுமறியான்.