முதலும் முடிவும்
உறவோ நட்போ வெகு
சிலவற்றில் அரிதாக
அரங்கேறும் வைபவம்
இஃது......
முதலில் கிரீடமாக
சிரசில் வீற்றிருக்கும்
மமதை போதையில்,
புரிதல் மதியேறயேற....
முடிவினில் கிரீடம்
துகளாக உருமாறி
பாதத்தின்கீழ் பரவிடும்
வினோதம் ஆழ்த்தும்
ஆச்சரியத்தில்......
நிதானமதை மனதில்
குடியேற்றி குழம்பாமல்
மதியால் தரமுணர்ந்து
தன்னுணர்வுடன் ஏற்பின்
தரம் தாழலிருக்காது
முடிவினில் முள்ளாய்.....
கவிபாரதீ ✍️